உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம். இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் உக்ரேன் கூறும் குற்றச்சாட்டு முழுவதும் போலியானவை.
மேலும் ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும், மேற்கத்திய நாடுகள் புச்சா தொடர்பான பொய் தகவல்களையும் பரப்பி வருக்கின்றன. இதனையடுத்து மரியுபோல் நகரை ரஷ்யா சூறையாடி விட்டதாகவும், 10,000 பேர் கொல்லப்பட்டதாகவும், ரஷ்ய ராணுவத்தினர் ஏராளமான பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்” என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.