Categories
உலக செய்திகள்

மியான்மரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரபல நாடு…. 6 மாதத்திற்குப் பின் விடுதலையான பத்திரிக்கையாளர்….!!

மியான்மரை தற்போது ஆட்சி செய்து வரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் 6 மாத சிறை தண்டனை பெற்ற பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை ராணுவத்தினர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளருக்கு 11 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் விதித்து ராணுவ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரின் குடும்பத்தினர்கள் அவரை மீட்டு தரக்கோரி அமெரிக்க அரசாங்கத்திற்கு விடுத்த கோரிக்கையின் பேரில் அந்நாடு மியான்மரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் தற்போது 6 மாதகால சிறை தண்டனைக்குப் பிறகு அமெரிக்க நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |