அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈரான் இழுபறி செய்வதாக அமெரிக்கா கூறுகிறது.
ஈரான் நாடுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ல் வெளியேறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது மறைமுகமாக இரு நாடுகளுக்கு இடையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடைபெற்றது. இதில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஈரானில் அதிபர் தேர்தல் ஆனது நடைபெறவுள்ளது என்பதால் இந்த பேச்சுவார்த்தையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து இப்ராஹிம் ரைசி என்பவர் ஈரானின் புதிய அதிபராக ஆகஸ்ட் மாதம் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் பிறகே அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தொடங்கும் என ஈரான் கூறியுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது “அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை தடுப்பதற்காகவே ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகவும் வேண்டுமென தாமதப்படுத்துவதாகும் மேலும் நல்ல எண்ணம் இருந்திருந்தால் அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்கும்” எனக் கூறினார்