அமெரிக்காவில் விளையாட்டுப் போட்டியை காண வந்த ரசிகை ஒருவர் கேமராமேன் தன்னை படம் பிடிப்பதையும் பொருட்படுத்தாமல் கையிலிருந்த ஒரு கிளாஸ் பீரை வாயை எடுக்காமல் ஒரே கல்பில் அடித்துள்ளார்.
அமெரிக்காவில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இதனை காண இளம்பெண் ஒருவர் அரங்கத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டை பார்த்துக்கொண்டிருக்கும் போது கையில் ஒரு கிளாஸ் பீருடன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டை படம் பிடிக்க வந்த கேமராமேன் கையில் பீருடனிருந்த இளம் பெண்ணை மைதானத்திலிருந்த பெரிய திரையில் காட்டியுள்ளார்.
அதனைப் பொருட்படுத்தாமல் அந்த இளம்பெண் அந்த பீரை வாயை எடுக்காமல் ஒரே கல்ப்பாக குடித்துள்ளார். அதன் பின்பும் மற்றொரு சுற்றில் அந்த இளம்பெண் கேமராமேன் தன்னை படம் பிடிக்க வருவதை கண்டவுடன் அருகிலிருந்த நபரிடம் ஒரு கிளாஸ் பீரை வாங்கி வாயை எடுக்காமல் கல்ப்பாக அடித்துள்ளார்.