வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் அசோக்குமார் தனது நண்பர்களுடன் அறந்தாங்கி ஆண்கள் அரசு பள்ளி அருகே அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சத்யராஜ், சுரேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் அசோக்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் அவர்கள் அசோக்குமாரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.