இஸ்ரேல் நாடாளுமன்ற குழு உளவு மென்பொருள்களை விற்பனை செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெகாசஸ் உளவு செயலி விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, இஸ்ரேல் நிறுவனங்களால் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் பெகாசஸ் போன்ற ஊடுருவல் மென்பொருள்களை மறுபரிசீலனை செய்ய சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. மேலும் வருகின்ற ஒன்பதாம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளிலும் அரசுகளுக்கு மட்டுமே கடுமையான குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்தை கண்காணிப்பதற்காக உளவு மென்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் அந்த மென்பொருளை கொண்டு உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்ற குழு தங்களது நிறுவனங்கள் உளவு மென்பொருள்களை பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.