இத்தாலியிலுள்ள தனியார் நிறுவன உளவு மென்பொருளின் மூலம் மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் பாலஸ்தீனர்களை சார்ந்த 6 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இத்தாலியில் என்.எஸ்.ஓ என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தைச் சார்ந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் உலக தலைவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சமீபத்தில் பகிரங்க குற்றச்சாட்டு வெளியே வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இத்தாலி செயல்பட்டுவரும் தனியார் நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனத்தின் தயாரிப்பாளன பெகாசஸ் உளவு மென்பொருளின் மூலம் இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் பாலஸ்தீனர்களை சார்ந்த 6 பேருடைய செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.