Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கும் செயலி… 10 பிரதமர்கள் 3 அதிபர்கள் செல்போன்கள் உளவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பெகாசஸ் உளவு செயலி மூலம் மூன்று அதிபர்கள், பத்து பிரதமர்களுடைய செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவை உலுக்கி வரும் உளவு செயலியான பெகாசஸ் மூலம் மூன்று அதிபர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பத்து நாடுகளின் பிரதமர்கள், ஒரு நாட்டின் மன்னர் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் அமைச்சர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா மற்றும் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் உள்ளிட்டோரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவர்களுடைய செல்போன்கள் எப்படி உளவு பார்க்கப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அரசு செய்திக் குறிப்புகளிலும், செய்தியாளர்கள் மூலமும், பொது வெளியிலும் வெளியான அவர்களுடைய செல்போன் எண்கள் மூலம் அவர்கள் அனைவரும் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |