உளவு மென்பொருள் மூலம் பல்வேறு முக்கிய தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெகாசஸ் மென்பொருள் மூலம் பல்வேறு தலைவர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த உளவு மென்பொருள் வாயிலாக உலகில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களான இந்தியா காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் போன்றோரின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது பெகாசஸ் மென்பொருள் சவூதியில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஐபோன்களை உளவு பார்ப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதிலும் ஐபோன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் இருக்கும் ஐ மெசேஜ் வசதி வழியாக அனைவரையும் உளவு பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளன.