Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெய்து வரும் சாரல்மழை…. நம்பிக்கையுடன் சாகுபடி செய்துள்ளோம்…. நடைபெறும் தீவிர பணி….!!

முருங்கை சாகுபடி செய்யும் பணி உடன்குடி வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முருங்கை செம்மண் தேரி பகுதியில் நன்றாக வளரும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் இதை சாகுபடி செய்துள்ளனர். எனவே ஒரு கிலோ எடை உள்ள முருங்கைக்காய் 40 முதல் 50 ரூபாய் வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும் குறைந்த அளவு நீர் பாய்ச்சினால் முருங்கை நன்றாக வளரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் உடன்குடி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதற்கு முருங்கை மிக ஏற்றது ஆகும். ஆகவே குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கு மற்ற பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |