இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் பெகாசஸ் உளவு மென்பொள் கொள்முதல் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.
பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை வந்த போது, மத்திய அரசு பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, எந்தவித வணிகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் வெளியான தகவல், உளவு மென்பொருள் பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வருடத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் உளவு மென்பொருள் பிரச்சனை ஏற்பட்டது தொடர்பில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அதில், 70 வருடங்களில் இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கடந்த 2017-ஆம் வருடம் அவர் மேற்கொண்ட பயணத்தை குறிப்பிட்டிருக்கிறது.
அந்த சமயத்தில், இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொண்ட ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் குறித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒப்பந்தத்தில் முக்கியமாக பெகாஸஸ் உளவு மென் பொருள் கொள்முதல் இருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.