Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. எனவே, பெலாரஸ் தங்கள் பக்கத்து நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்ததற்கு எச்சரித்திருக்கிறது.

அதாவது, தங்கள் நாட்டின் மீது இந்த மூன்று நாடுகளும் தாக்குதலை மேற்கொண்டால் பேரழிவு, உயிரிழப்புகள் மற்றும் குண்டு வெடிப்புகளால் பாதிப்படையும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி எச்சரித்திருக்கிறார்.

Categories

Tech |