Categories
உலக செய்திகள்

எங்களுக்கு போரில் விருப்பமில்லை…. ஆனால் நீங்க மோதுனா… போர் உருவாகும்…. -பெலாரஸ் அதிபர்…!!!

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள்.

அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். பெலாரஸ் மற்றும் ரஷ்ய நாடுகள் விரைவாக உக்ரைன் நாட்டின் வடக்கில் ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. ரஷ்ய அரசு, உக்ரேன் மீது படையெடுக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தாலும், உக்ரைன்  ரஷ்ய நாட்டின் மீது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |