ஒரு பெண் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் சிம்பன்சி குரங்கை நேசிப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் Adie Timmermans என்ற பெண் வாழ்ந்து வந்துள்ளார். அவர் Antwerp மிருகக்காட்சிசாலையில் Chita எனும் 38 வயதுடைய சிம்பன்சி குரங்கை சந்தித்து அதனுடன் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். அந்த சிம்பன்சி குரங்கும் அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்துள்ளது. இதனை கவனித்த அதிகாரிகள் Adie Timmermans அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுக்குறித்து Adie Timmermans கூறியதாவது “நான் Chitaவை விரும்புகிறேன். அதுவும் என்னை விரும்புகிறது. அதனால் எங்களுக்குள் ஒரு உறவு ஏற்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்தபோது Adie Timmermans கடந்த 4 வருடமாக Chitaவை ஒவ்வொரு வாரமும் சந்தித்து அதிக நேரத்தை செலவிட்டுள்ளதாகவும் இருவருக்கிடையில் உண்மையிலேயே உறவு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் நடுவில் கண்ணாடி தடுப்பு சுவரில் இருந்தாலும் இருவரும் சைகைகளால் முத்தங்களை பரிமாறிக் கொள்வதுமாக இந்த உறவு இருந்துள்ளது. இந்த உறவு Chitaவுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் நம்புகின்றனர். ஏனெனில் இது மற்ற சிம்பன்சி குரங்குகளுடனான உறவை வளர்ப்பதில் தடையாக மாறிடும். இதனால் இந்த இருவருக்குமான உறவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் Adie Timmermans இனிமேல் Antwerp மிருகக்காட்சிசாலை வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு Adie Timmermans கூறியதாவது “மிருகக்காட்சிசாலை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையில் நியாயமில்லை. மற்ற பார்வையாளர்கள் செல்லும் போது நான் மட்டும் ஏன் செல்ல கூடாது” என கூறி கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றார்.