Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு வாழ விருப்பமில்லை….. பெண் எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமணச்சேரி கிராமத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்ரா சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா தனது நோய்க்கான மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளார்.

அதன்பின் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |