வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள குருபர அள்ளி ஆலங்கரை பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.