பெண் என்ஜினீயர் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் பி.இ. படித்துவிட்டு நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நாகர்கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வினோதினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் வினோதினியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் வினோதினி கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வினோதினியை தேடி வருகின்றனர்.