சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவப் பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று 239 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதில் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஆதம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் சவுதி அரேபியா வழியாக சென்னை வந்துள்ளார். அப்போது தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் மருத்துவ பேராசிரியரான ஸ்ரீ ராம் என்பவர் அந்த பெண்ணின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் மருத்துவ பேராசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் என்ஜினீயர் சென்னையில் விமானம் தரை இறங்கியதும் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஸ்ரீராமை எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பெண் என்ஜினீயர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதன்பின் அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.