Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…கர்ப்பிணிபெண் எடுத்த விபரீத முடிவு…குடும்பத்தினற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நான்கு மாத  லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு வீரராகவன் என்ற 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் விடுமுறை காரணமாக வீட்டிற்கு  சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற அருண்குமார் இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.  இந்நிலையில் அறைக்குள் சென்ற  லலிதா நீண்டநேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருண்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட லலிதாவை மீட்டு அருண்குமார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லலிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் லலிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கர்ப்பிணிப் பெண்ணான லலிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |