2-வது கள்ள காதலனுடன் ஓடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதி நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ராமலட்சுமி கண்ணனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய கணவனை பிரிந்த பெண்ணுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
தற்போது அந்த பெண்ணிற்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இது குறித்து அறிந்த உடன் கண்ணன் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத அந்த பெண் தனது 2-வது கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார். இதுகுறித்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.