கள்ளக் காதலன் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சித்ரா மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அழகாபுரம் பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழுமலை சித்ராவிற்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏழுமலைக்கும் சித்ராவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சித்ரா அவருடைய அண்ணனிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஏழுமலை சித்ராவின் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சித்ரா ஏழுமலையிடம் இனிமேல் என் வீட்டிற்கும் மளிகை கடைக்கும் நீ வரக்கூடாது என கண்டித்து கூறியிருக்கிறார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ஏழுமலை சித்ராவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் மிகவும் பலத்த காயம் அடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சித்ராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.