பெண் காவல்துறையினரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்று தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது சுற்றித்திரிந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் நியூ தத்தளகம் பகுதியில் வசிக்கும் அசாருதீன் என்பதும், இவர் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் புனிதா என்பவர் தனது பணியை முடித்து விட்டு இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடமிருந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்தை அசாருதீன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அசாருதீனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவரிடமிருந்து 11 பவுன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பெண் காவல்துறையினரிடம் நகை பறித்து தலைமறைவாக இருந்த அசாருதீன் 5 மாதங்களுக்குப் பின் பிடிபட்டுள்ளார்.