பிரான்சில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை சுவிட்சர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை லியோன் என்ற நகரத்தில் 30 வயது மதிப்புள்ள பெண்ணொருவர் கொல்லப்பட்டு வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
ஆனால் அந்த வீட்டில் வேறு யாருமே இல்லை. இதனால் அந்தப் பெண்ணின் கணவன் தான் கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்று எண்ணி பெண்ணின் கணவன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் லியோன் நீதிமன்றம் பெண்ணை கொலை செய்த கணவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
இதனால் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் . அப்போது கொலை செய்து விட்டு தப்பியோடிய பெண்ணின் கணவரை ஒரே நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிரான்ஸ் காவல் துறையினரிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.