சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் லட்சுமிபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமிபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.