ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மத்திகோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் பணியில் இருந்தபோது சிலர் அங்கு சென்று தரமற்ற அரசு கொடுப்பதாக கூறி தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து பெண் ஊழியரை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகவே மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 440 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 324 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதனால் பொருட்கள் வாங்கச் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கு முன்னதாகவே கடையடைப்பு குறித்து தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் செல்வன் தலைமையில், இந்துக்கல்லூரி அனாதை மடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ஜெகன் மகேஷ், அருண் ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.