பெண் ஒருவர் தனது காதலனுக்கு தாயாக மாறியுள்ள சம்பவம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
உலகில் அதிக அளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் செயலி டிக் டாக் ஆகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது காணொளிக் காட்சியினை பதிவிடுவர். மேலும் இதில் ஆண், பெண் இருவரும் நட்பு பாராட்டவும் செய்வர். இது போன்று டிக்டாக்கில் பிரபலமான @ys.amri என்ற ID கொண்ட பெண் வாலிபர் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காதலித்து வந்த வாலிபரின் தாய் திடீரென சில நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது காதலர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் தனது காதலனுக்கு அந்தப் பெண்ணே தாயாக மாறியுள்ள சம்பவம் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. இது குறித்து அந்த இளம்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “என் காதலரின் அம்மா சில நாள்களுக்கு முன் இறந்து விட்டார். மேலும் என் காதலர் அவரின் தாய் மீது வைத்திருந்த அதீத பாசத்தினால் மிகவும் சோகத்தில் உள்ளார். அவர் வருத்தத்துடன் இருப்பதை என்னால் காணமுடியவில்லை. இதனால் நான் ஒரு துணிச்சலாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.
அதாவது, என் காதலர் இழந்த தாய் பாசத்தை அவருக்கு கொடுக்க நான் விரும்புகிறேன். இதற்காக என் காதலனின் தந்தையிடம் பேசி அவரையே மணமுடித்து கொண்டேன். அவர் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் திருப்பி தர இருக்கிறேன். எனக்கு அவரின் மகிழ்ச்சி தான் மிகவும் முக்கியம்” என்று பதிவிட்டுள்ளார். குறிப்பாக ஆண்களுக்கு தன்னுடைய காதலி இன்னொரு அம்மாவாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் இவர்களின் கதையிலோ உண்மையாகவே காதலி அம்மாவாக மாறியுள்ளார். இந்த சம்பவமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.