Categories
தேசிய செய்திகள்

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு… ரயில்வே அமைச்சகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறை அறிமுகம்…!!

இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். அதில் 46 லட்சம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர்.

புதுடெல்லியில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கின்றன. அதில் 46 லட்சம் பேர் பெண்கள் பயணம் செய்கின்றனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகத்தின் அந்த புதிய வழிகாட்டு திட்டங்கள் குறுகிய கால திட்டம், நீண்ட காலத் திட்டம் என வகைப்படுத்தி செயல்படுத்தப்பட வேண்டும். அதில் சந்தேகநபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது ‘குறுகிய கால திட்டங்கள்’ என்றும் ரயில் நிலையங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதும், கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது ‘நீண்ட கால திட்டங்கள்’ என்று பிரித்துள்ளனர்.

அதற்குப்பிறகு  ரயில் நிலைய வளாகத்தில் பாழடைந்த கட்டிடங்கள், பயன்பாடற்ற கட்டிடங்கள் இருந்தால்  பொருளியல் துறையுடன் கலந்து ஆலோசித்து அவற்றை தரைமட்டமாக இடிக்க வேண்டும். ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், அழகு சாலைகள் போன்ற இடங்களில் மின்விளக்கு வசதி இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். பயணிகள் காத்திருப்பு அறைகளில் கேமராக்களை பொருத்தி அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதன்பின் ரெயில்களிலோ , ரயில் நிலையங்களிலோ  மது அருந்துபவர்களை கைது செய்து  வழக்குப்பதிவு செய்யலாம்.பெண்களுக்கு ஏதேனும் இன்னல்கள் நேர்ந்தால் அது குறித்து காலதாமதமின்றி புகார் அளிப்பதற்கு ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உதவி செய்ய வேண்டும் பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளை நடத்தப்படலாம்.

இதற்கு முன்பு ரயில் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் நடத்த இடங்களில் போலீசார் அடிக்கடி கண்காணித்து அத்தகைய குற்றவாளிகளின் தரவு பட்டியலை சேகரித்து வைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு மருத்துவ உதவியை, போலீஸ் உதவியை, சட்ட ஆலோசனை, தற்காலிக தங்குமிடம் போன்ற அனைத்தும் ஒன்றாக கிடைக்கும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு மன்றம் ஒன்றினை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற பலவகையான வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |