மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதில் அனிஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் திருமணமான 10 மாதத்தில் அனிஷா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதால் அனிஷாவின் கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.