உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிந்தாமணியின் காலில் புண் ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சிந்தாமணி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற ஈஸ்வரமூர்த்தி தீயில் சிந்தாமணி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் ஈஸ்வரமூர்த்தி அக்கம்பக்கத்தினர் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு சிந்தாமணியை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிந்தாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.