மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் மற்றும் ஒரு பெண்ணுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராஜா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் ராஜாவின் மனைவி லலிதாவிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்து ராஜாவின் மனைவி அந்தப் பெண்மணியிடம் கூறிய போது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து லலிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினரின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த லலிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தான் கொண்டுவந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை மீட்டுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லலிதாவை காவல்துறையினர் விசாரணைக்காக சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.