Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி சந்தேகம்… தினமும் தகராறு… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஹாஜியார் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மாதவன் – ஆவுடையம்மாள். இவர்களுக்கு  12 வயதில் ஒரு மகள் உள்ளார்.  இந்நிலையில் மாதவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் மாதவன்  குடித்துவிட்டு வந்து ஆவுடையம்மாளிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஆவுடையம்மாள்  தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவருடைய அலறல்  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தீயை அணைத்து ஆவுடையம்மாளை மீட்டு  சிகிச்சைக்காக  அங்கிருந்த அரசு  மருத்துவமனையில்  அனுமதித்தனர். இருப்பினும்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக ஆவுடையம்மாள் தனது கணவர் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதால் தான்  தீ வைத்துக் கொண்டதாக நீதிபதி அப்துல்ஹனியிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தொடர்பாக ஆவுடையம்மாளின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாதவன் மீது  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |