Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா அவரது கணவரை விட்டு பிரிந்து முக்கூடலில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நித்யாவிடம் ராஜா செல்போனில் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்யா திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் நித்யா பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த நித்யாவின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |