பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான வாசுகிக்கு மட்டும் திருமணம் செமிய மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் வாசுதேவனுக்கும் லதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த லதா கடந்த 11-ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் அப்புக்குட்டி மற்றும் நண்பர் சுரேஷ் ஆகியோர் லதாவை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லதாவை அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.