தலிபான்கள் வசம் சென்ற ஆப்கானிஸ்தானிலுள்ள தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மீண்டும் பெண் தொகுப்பாளருடன் காலை நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய உடனே அவர்கள் பெண்களுக்கான சில கட்டுப்பாடுகளை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒன்றாக ஊடகத் துறையில் பணிபுரிந்து வந்த பல பெண்களை தலிபான்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள்.
மேலும் வெளிநாடுகளில் ஊடகத்தில் பணி புரியும் ஆப்கன் பெண்கள் கட்டாயமாக முகத்தை மூடிய படி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கனில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் Tolo தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது. அதாவது பெண் தொகுப்பாளர் ஒருவருடன் காலை நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொடங்கியுள்ளது.