Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பரமசிவம் பாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் முத்துக்குமார் தீபாவளி தினத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |