பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அருள்புரம் பகுதியில் காட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடமாக கஸ்தூரி உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் கஸ்தூரி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து வேலை முடிந்து வந்த காட்டு ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது கஸ்தூரி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து காட்டு ராஜா அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கஸ்தூரியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கஸ்தூரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.