Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடனால் அவதிப்பட்ட குடும்பம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மன வேதனையில் பெண் திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாகர் பணகுடி வந்துவிட்டார். இவருக்கு அம்மு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் புதிதாக வீடு கட்டியதில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மு மிகவும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்சியடைந்த அவரது குடும்பத்தினர் அம்முவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அம்மு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |