பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைகுறிச்சி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இன்று வரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முத்துலட்சுமி நேற்று திடீரென்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமியின் குடும்பத்தினர் கல்லிடைகுறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.