Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூரில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மிக்கேல், ரேஷ்மா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நந்தினி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் நந்தினி சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நந்தினி கடந்த 10- ந்தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நந்தினியை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த களம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |