சினிமாவுக்கு அழைத்து செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொடுவாய் வினோபா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கவிதா தனது கணவரிடம் விக்ரம் சினிமா படத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மனமுடைந்த கவிதா திடீரென வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.