5 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பயர்லைன் பகுதியில் சிட்டி பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கனீஸ்கர், பிரீத்தி மற்றும் 10 மாத குழந்தை உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான சிட்டிபாபு கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் வெங்கடேஸ்வரி தனது தாயாருடன் வீட்டு வேலைகளை செய்து வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வரின் தாயார் இறந்து விட்டார்.
இதனால் வெங்கடேஸ்வரி மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி திடீரென கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேஸ்வரியை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெங்கடேஸ்வரியை அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.