Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனமுடைந்த சந்திரா வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திராவின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |