Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பழனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இதில் மணிராஜ் என்ற மாற்றுதிறனாளி மகனுக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கணகராணி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணகராணியின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |