Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெய்விளை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த பல வருடங்களாக மகாராஜனும், பிரேமாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இம்மானுவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார். இதனால் பிரேமா நெய்விளையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரேமா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாசரேத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |