பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கொட்டம்பட்டி பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவரது கணவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 3 மாதம் முன்பு வேலாயுதம்பாளையத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கியுள்ளார். இவரது தாய் மணியாத்தாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வேலாயுதம்பாளையத்திற்கு வந்த மகள் கல்யாணியம்மாள் மற்றும் அவரது அக்கா ஆகிய இருவரிடமும் குடிபோதையில் மணியாத்தாள் சண்டை போட்டுள்ளார்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கல்யாணியம்மாளும் அவரது பெரியம்மாவும் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் மகள் கல்யாணியம்மாள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்து தனது அம்மாவிடம் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்கார பெண் சென்று பார்த்தபோது மணியாத்தாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணியாத்தாளின் உடலை கைப்பற்றி அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.