தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரடிவாவி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அந்த தகராறில் மனைவியிடம் தகராறு செய்து விட்டுச் கார்த்திகேயன் தூங்க சென்றுவிட்டார்.
இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது ஜானகி அருகில் உள்ள அறையின் வீட்டு கூரையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்சியடைந்த கார்த்திகேயன் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜானகியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.