கணவனைப் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜா என்பவரை 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அதன்பின் ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அம்மூரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். பின்னர் திடீரென ஜெயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.