திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தேவிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தேவிகாவுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்ற காரணத்தால் வருவாய் கோட்டாட்சியர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.