மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாளகுப்பம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்நிலையில் அம்சவள்ளி உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்சவள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.