பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது உடைய திருநங்கை ஒருவர் பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறார். ஏனென்றால், மலேசியாவில் ஒரு திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாமயை அவமதிக்கும் செயலாகும். இந்த அழகி மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். இதனால் அவர் தான் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி ஓடியுள்ளார். ஆனால் தாய்லாந்து அரசு அவர் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி அவரை கைது செய்துள்ளது. மேலும் அவர் மலேசியா சென்றால் மூன்று மாதங்கள் வரை ஆண்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
இதுகுறித்து அந்த அழகி கூறுகையில், “தனக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல அஞ்சுவதாகவும், தன்னை சமூக ஊடகம் ஒன்றில் பின் தொடரும் 31 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கும் தெரிவித்துள்ளார்”.அவர் மலேசியாவுக்கு சென்றால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார் என்பதால் மனித உரிமை ஆர்வலர்கள் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர ஆதரவளித்து வருகின்றனர்.